இலங்கை டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!

Updated: Sun, Aug 04 2024 20:34 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்படி இத்தொடரின் முடிவில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதுடன், வெஸ்ட் இண்டீஸ் அணியையும் ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இதனையடுத்து அந்த அணி இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. 

அதன்படி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதி முடிவடையவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஸாக் கிரௌலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த திலான் பென்னிங்டனிற்கும் இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அறிமுக வீரர் ஜோர்டன் காக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ஸ்டோனும் மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

மேற்கொண்டு ஸாக் கிரௌலி இத்தொடரில் தேர்வு செய்யப்படாததையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பென் டக்கெட்டுடன் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அல்லது டேனியல் லாரன்ஸ் ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்திருந்த வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கஸ் அட்கின்சன், சோயிப் பஷீர், ஹாரி புரூக், ஜோர்டான் காக்ஸ், பென் டக்கெட், டேனியல் லாரன்ஸ், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர்

  • முதல் டெஸ்ட் - ஆகஸ்ட் 21 - 25 - மான்செஸ்டர்
  • இரண்டாவது டெஸ்ட் - ஆகஸ்ட் 29 - செப்.02 - லண்டன்
  • மூன்றாவது டெஸ்ட் - செப்.06 - 10 - லண்டன்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை