டி20 உலகக்கோப்பை: ஸ்மித், மேக்ஸ்வேல் என அதிரடி வீரர்களுடன் களமிங்கும் ஆஸ்திரேலியா!

Updated: Thu, Aug 19 2021 06:57 IST
Cricket Australia announced their T20 World Cup squad (Image Source: Google)

இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.

இதையடுத்து இத்தொடருக்கான போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்து ரசிகர்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. 

அந்தவகையில் ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான 15 பேர் அடங்கிய ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அணியின் துணைக்கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதில் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச தொடர்களின் போது ஓய்விலிருந்த ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், டேவிட் வார்னர், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். 

ஆஸ்திரேலிய அணி : ஆரோன் ஃபிஞ்ச் (கே), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ் , ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்வெப்ஸன், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை