இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளது. இதற்கான அனைத்து அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
Advertisement
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்பதற்காக நாளைய தினம் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று முந்தினம் சென்னை வந்தடைந்தார்.
Advertisement
தற்போது சென்னையிலுள்ள தோனி, நடிகர் விஜய் நடித்துவரும் பீஸ்ட் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று விஜயுடன் உரையாடியுள்ளார். அப்போது இருவரும் சேர்ந்த எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.