ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் 14ஆவது ஐபிஎல் தொடரானது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த தொடரின் முதலாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி ஏற்கனவே இறுதி போட்டிக்குள் நுழைந்தது. 

Advertisement

அதனை தொடர்ந்து நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று சென்னை அணியுடன் இறுதிப் போட்டியில் இன்று மோத இருக்கிறது. அதன்படி இன்று துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த இறுதிப் போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. 

Advertisement

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே அணி இம்முறை கேப்டன் தோனிக்காக கோப்பையை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடி வருகிறது. அதே வேளையில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியை இரண்டாவது பாதியில் இருந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக இன்று எந்த அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இரு அணியிலும் விளையாடும் பிளேயிங் லெவர் யார் யார் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.

ஏனெனில் இன்னும் சுரேஷ் ரெய்னாவிற்கு ஏற்பட்ட காயத்தின் தன்மை சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் முழுவதுமாக விளக்கப்படவில்லை என்பதன் காரணமாகவும், முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் உத்தப்பா அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாகவும் இன்றைய இறுதிப்போட்டியில் ரெய்னாவிற்கு பதிலாக உத்தப்பாவே விளையாடுவார் என்று தெரிகிறது.

கொல்கத்தா அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் காயத்திலிருந்து மீண்டுள்ளதால் அவர் நிச்சயம் அணியில் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

Advertisement

இப்போட்டிக்கான உத்தேச அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (கே), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஈயான் மோர்கன் (கே), தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், ஷாகிப் அல் ஹசன், லோக்கி ஃபர்குசன், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News