Chennai Super Kings vs Kolkata Knight Riders Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

CSK vs KKR: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் -  எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம், சென்னை
  • நேரம் - ஏப்ரல் 11, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

CSK vs KKR Pitch Report

சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான இப்போட்டியில் சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சதகமான இந்த மைதானத்தில் நின்று விளையாடும் பேட்டர்களால் ரன்களை குவிக்க முடியும். மேற்கொண்டு இந்த மைதானத்தில் இதுவரை நடந்து முடிந்துள்ள 10 சர்வதேச டி20 போட்டிகளின் முடிவில் 6 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 3 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இங்கு பனியின் தாக்கம் இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம்.

CSK vs KKR: Where to Watch?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

CSK vs KKR Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 30
  • சென்னை சூப்பர் கிங்ஸ் – 19
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 10
  • முடிவில்லை - 01

CSK vs KKR Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - டெவான் கான்வே
  • பேட்ஸ்மேன்கள் - அஜிங்கியா ரஹானே (துணை கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், அங்கிரிஷ் ரகுவன்ஷி
  • ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல்
  • பந்துவீச்சாளர்கள் - கலீல் அகமது, வருண் சக்ரவர்த்தி, நூர் அகமது.

Chennai Super Kings vs Kolkata Knight Riders Probable Playing XI

Chennai Super Kings Probable Playing XI: ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஷிவம் துபே, மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர், ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது.

இம்பாக்ட் பிளேயர் - மதீஷ பத்திரன.

Kolkata Knight Riders Probable Playing XI: குயின்டன் டி காக், சுனில் நரைன், அஜிங்கியா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரமன்தீப் சிங், ஆண்ட்ரே ரஸல், ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா, ஸ்பென்சர் ஜான்சன், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.

இம்பாக்ட் பிளேயர் - ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி.

CSK vs KKR Dream11 Prediction, CSK vs KKR, CSK vs KKR Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, CSK vs KKR Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Chennai Super Kings vs Kolkata Knight Riders

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News