இந்தியான் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 49ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் முதல் முறையாக சந்திக்கவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிரிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
  • இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

பிட்ச் ரிப்போர்ட்

பொதுவாக, சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படும் நிலையில், இந்த சீசன் ஐபிஎல் தொடரில் அதிக ஸ்கோர்கள் குவிக்க கூடிய மைதானங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 170 ரன்களாக இருக்கிறது. மேலும் முந்தைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்த 212 ரன்கள் என்ற இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணியால் எட்டமுடியவில்லை. இருப்பினும் பனியின் தாக்கும் இருக்கும் என்பதால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 28
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 15
  • பஞ்சாப் கிங்ஸ் - 13

நேரலை

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

சென்னை சூப்பர் கிங்ஸ்: அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கே), டேரில் மிட்செல், மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தஃபிசூர் ரஹ்மான், மதீஷா பதிரனா

Advertisement

பஞ்சாப் கிங்ஸ்: ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன் (கே), ரைலீ ரூஸோவ், ஜிதேஷ் சர்மா, ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சஹார், அர்ஷ்தீப் சிங்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: ஜானி பேர்ஸ்டோவ், பிரப்ஷிம்ரன் சிங்
  • பேட்டர்ஸ்: டேரில் மிட்செல், ஷஷாங்க் சிங், ஷிவம் துபே (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள்: சாம் கரன், ரவீந்திர ஜடேஜா
  • பந்துவீச்சாளர்கள்: ககிசோ ரபாடா, மதீஷா பதிரனா, முஸ்தஃபிசூர் ரஹ்மான்.

CSK vs PBKS Dream11 Prediction, Today Match Prediction, Today Match CSK vs PBKS, CSK vs PBKS Dream11 Team, Fantasy Cricket Tips, CSK vs PBKS Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Chennai Super Kings vs Punjab Kings

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News