Chennai Super Kings vs Rajasthan Royals, IPL 2024 Dream11 Team: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் நாளை நடைபெறும் முக்கியமான லீக் போட்டி ஒன்றில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது. நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 வெற்றிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றை ஏறத்தாழ உறுதிசெய்தாலும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை தக்கவைக்க இந்த வெற்றியானது அந்த அணிக்கு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் மறுபக்கம் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் ஊசலாடிக்கொண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாந்து இனிவுள்ள அனைத்து போட்டிகளையும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

CSK vs RR: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
  • நேரம் - மதியம் 3.30 அணி
Advertisement

CSK vs RR, Pitch Report

பொதுவாக,  சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படும் நிலையில், இந்த சீசன் ஐபிஎல் தொடரில் அதிக ஸ்கோர்கள் குவிக்க கூடிய மைதானங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 170 ரன்களாக இருக்கிறது. மேலும் இப்போட்டியானது பகலில் நடைபெறவுள்ளதால் நிச்சயம் வானவேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாஸ் வெல்லும் அணி சேஸிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

CSK vs RR Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 28
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 13
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 15

 

Advertisement

CSK vs RR: Where to Watch?

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

Chennai Super Kings vs Rajasthan Royals Probable Playing XI

Advertisement

Chennai Super Kings Probable Playing XI: அஜிங்கியா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட், டேரில் மிட்செல், மொயின் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே.

Rajasthan Royals Probable Playing XI: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், ரோவ்மன் பவல், டோனோவன் ஃபெரீரா, ரவிச்சந்திரன் அஸ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

CSK vs RR, Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - டேரில் மிட்செல், ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா, ரியான் பராக்
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட், துஷார் தேஷ்பாண்டே.
Advertisement

CSK vs RR Dream11 Prediction, Today Match Prediction, Today Match CSK vs RR, CSK vs RR Dream11 Team, Fantasy Cricket Tips, CSK vs RR Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Chennai Super Kings vs Rajasthan Royals

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News