ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் இரண்டு 2023-27 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டெய்லர் மற்றும் சமித் படேல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் அபாரமாக விளையாடிய சமித் படேல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டிற்கு 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின் இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவன் டெய்லர் 46 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து 70 ரன்களை எடுத்திருந்த சமித் படேலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மொனாங்க் படேல் 26 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் - மிலிந்த் குமார் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

Advertisement

இதில் அரைசதம் கடந்த கையோடு 50 ரன்களில் ஆரோன் ஜோன்ஸ் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷயான் ஜஹாங்கீர் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய மிலிந்த் குமார் 47 ரன்களில் விகெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் அமெரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்களைச் சேர்த்தது. கனடா அணி தரப்பில் சாத் பின் ஸஃபர் 3 விக்கெட்டுகளையும், கலீம் சனா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கனடா அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. 

அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஆரோன் ஜான்சன் 10 ரன்களுக்கும், தில்ப்ரீத் பஜ்வா 8 ரன்களுக்கும், கேப்டன் நிக்கோலஸ் கிர்டன் 9 ரன்களிலும், ஹர்ஷ் தாகெர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த பிரகாத் சிங் - ஸ்ரேயாஸ் மொவ்வா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து இப்போட்டியில் தங்கள் அரைசதங்களை கடந்ததுடன், 5ஆவது விக்கெட்டிற்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். 

பின்னர் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 72 ரன்கள்ச் சேர்த்த நிலையில் பிரகாத் சிங் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரிகளுடன் 68 ரன்களை எடுத்திருந்த ஸ்ரேயாஸ் மொவ்வாவும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஆதித்யா வரதராஜன் 25 ரன்களை எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் கனடா அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அமெரிக்க அணி தரப்பில் ஷால்க்விக் ஷாட்லி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் அமெரிக்க அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News