Advertisement
Advertisement

Usa vs can

அமெரிக்காவை கண்டு மற்ற அணிகள் பயப்படலாம் - முகமது கஃப்!
Image Source: Google
Advertisement

அமெரிக்காவை கண்டு மற்ற அணிகள் பயப்படலாம் - முகமது கஃப்!

By Bharathi Kannan June 03, 2024 • 11:50 AM View: 108

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது நேற்று கோலாகலமாக தொடங்கியது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கனடா அணியானது நவ்நீத் தலிவால் மற்றும் நிக்கோலஸ் கிர்டன் ஆகியோரது அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 194 ரன்களை குவித்தது. 

இதில் அதிகபட்சமாக நவ்நீத் தலிவால் 61 ரன்களையும், நிக்கோலஸ் கிர்டன் 51 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து கடின இலக்கை துரத்திய அமெரிக்க அணியின் தொடக்க வீரர்கள் ஸ்டீவன் டெய்லர் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் மொனாங்க் படேல் 16 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனையடுத்து இணைந்த ஆண்ட்ரிஸ் கஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். 

Advertisement

Related Cricket News on Usa vs can

Advertisement