தென் ஆப்பிரிக்க - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி செயிண்ட் ஜியார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். ஆனால் இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது. அணியின் அதிரடிய வீரர் சஞ்சு சாம்சன் ரன்கள் ஏதுமின்றியும், அபிஷேக் சர்மா 4 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவும் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

இதனையடுத்து சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய திலக் வர்மா 20 ரன்களுக்கும், அக்ஸர் படேல் 27 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரிங்கு சிங்கும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 45 ரன்களைச் சேர்த்து அணியை ஓரளவு நல்ல ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றார். 

இதன்மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஸீ, ஆண்டைல் சைம்லேன், ஐடன் மார்க்ரம் மற்றும் பீட்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.

 

இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வீரர் டேவிட் மில்லர் பிடித்த கேட்ச் ஒன்று கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்தவகையில், இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த திலக் வர்மா, ஐடன் மார்க்ரம் பந்துவீச்சில் கவர் திசையில் பவுண்டரி அடிக்கும் முயற்சியில் சிறப்பான கவர் டிரைவ் ஒன்றை அடித்தார். அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த டேவிட் மில்லர் டைவ் அடித்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்தினார். 

Advertisement

இதன் காரணமாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 20 ரன்களைச் சேர்த்திருந்த திலக் வர்மா தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் டேவிட் மில்லர் பிடித்த இந்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேசமயம் இலக்கை நோக்கி விளையாடிவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது வரை 2 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்களைச் சேர்த்துள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News