ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற இந்லையில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று கார்டிஃபில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

Advertisement

அதன்படி, முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்டிராவிஸ் ஹெட் 14 பந்தில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரைத்தொடர்ந்து 28 ரன்களில் மேத்யூ ஷார்ட்டும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் அதிரடியாக விளையாடி அரை சதமடித்து வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய ஜோஷ் இங்கிலிஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 193 ரன்களை குவித்தது.  இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன், பிரிடோன் கார்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Advertisement

இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியில் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான பில் சால்ட் 23 பந்தில் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரைத்தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய லியாம் லிவிங்ஸ்டோன் அரை சதமடித்து அசத்தினர். மேற்கொண்டு அவர் 47 பந்தில் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 87 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அவருக்கு துணையாக விளையாடிய ஜேக்கப் பெத்தேல் 44 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இங்கிலாந்து அணி19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி அரைசதம் கடந்த இளம் வீர்ர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான இந்த டி20 போட்டியில் ஃபிரேசர் மெக்குர்க் 29 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் அரைசதம் கடந்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். 

முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் கடந்த 2009ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 22 வயது 76 நாள்களில் அரைசதம் கடந்து அசத்தியதே இதுநாள் வரை சாதனையாக உள்ளது. அந்த வரிசையில் தற்போது ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 22 வயது 155 நாள்களில் அரைசதம் கடந்து இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News