ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை ஒயிட்வாஷ் செய்தது. இதில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 57 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Advertisement

இதுவரையில் 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர் 8,786 ரன்கள் குவித்துள்ளார். இதில், 26 சதங்கள், 37 அரைசதங்கள் அடங்கும். மேலும், 3 இரட்டை சதங்களும் அடித்துள்ளார். இந்த நிலையில், தான் இந்த போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வார்னருக்கு பாகிஸ்தான் வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சியை கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement

அதுமட்டுமின்றி ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வார்னருக்கு சிறப்பு மரியாதை செய்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியில் இடம் பெற்றுள்ளார். இன்று நடக்கும் 34ஆவது போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்கிறது. இதில் டேவிட் வார்னர் விளையாட இருக்கிறார்.

இந்தப் போட்டியானது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக வார்னர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியுள்ளார். ஹண்டர் பள்ளத்தாக்கில் தனது சகோதரரின் திருமணத்திற்கு சென்றிருந்த நிலையில் அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் மைதானத்திற்கு வந்தார். இந்நிலையில் டேவிட் வார்னர் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News