ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. அதிலும் முதல் போட்டியில் கடைசி பந்தில் இலக்கை எட்டிய ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றிபெற்றது. 

Advertisement

அதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில்  174 ரன்களுக்கே ஆல் அவுட்டான ஆஸ்திரேலிய அணி, அதன்பின் விளையாடிய நியூசிலாந்து அணியை 102 ரன்களுக்கு சுருட்டியதுடன், 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 நாளை ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து காயம் காரணமாக டேவிட் வார்னர் 3ஆவது டி20 போட்டியிலிருந்து விலகியுள்ளார். மேலும் அவர் தனது காயத்திலிருந்து மீள சிறிது காலம் மட்டுமே தேவைப்படும். இதனால் அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் பங்கேற்பதை இது பாதிக்காது என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் விளையாடிய டேவிட் வார்னர், இரண்டாவது டி20 போட்டியில் இடம்பெறவில்லை. அதேசமயம் வரவுள்ள ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் டேவிட் வார்னர் அந்த அணியின் தொடக்க வீரராக மட்டுமின்றி, அணியையும் வழிநடத்துவார் என்பதால் அந்த அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News