நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து 150 ரன் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தாக்காவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியினர் நியூசிலாந்து வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

Advertisement

இதில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 14 ரன்களிலும், ஜாகிர் ஹசன் 8 ரன்களிலும், கேப்டன் ஷான்டோ 9 ரன்களிலும் நடையைக் கட்டினர். மோமினுல் ஹேக் 5 ரன்னில் வந்து வேகத்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த முஷ்ஃபிக்கூர் ரஹீம் மற்றும் ஷஹாதத் ஹொசைன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

பின் 35 ரன்களில் முஷ்ஃபிக்கூர் ரஹிம் விக்கெட்டை இழக்க, 31 ரன்க்ளுக்கு ஷஹாதத் ஹொசையும் ஆட்டமிழந்தார். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 66.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கிளென் பிலீப்ஸ், மிட்செல் சாண்ட்னர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்கும் வங்கதேச அணி பந்துவீச்சில் மிரட்டியது. நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டர் வீரர்களான டாம் லேதம் 4. டெவான் கான்வே 11, கேன் வில்லியம்சன் 13, ஹென்றி நிக்கோலஸ் 1, டாம் பிளெண்டல் ரன்கள் ஏதுமின்றியும்  என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 55 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் 12 ரன்களிலும், கிளென் பிலிப்ஸ் 5 ரன்களிலும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுகளையும், தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். 

Advertisement

இதையடுத்து இன்று நடைபெற இருந்த இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமானது. அதன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News