ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து, நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலபரீட்சை நடத்தவுள்ளது. நடப்பாண்டு பொதுதேர்தல் நடைபெறவுள்ள காரணத்தால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது போட்டிகளை விசாகப்பட்டினத்தில் விளையாடவுள்ளது. மேலும் இரு அணியிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
  • இடம் - விடிசிஏ கிரிக்கெட் மைதானம், விசாகப்பட்டினம்
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

போட்டி முன்னோட்டம்

ரிஷப் பந்த் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொண்டுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, இந்த சீசனில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக அணியின் பேட்டிங்கில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோரைத் தவிர்த்து மற்ற பேட்டர்கள் யாரும் சரிவர சோபிக்காததே அணியின் தோல்விக்கு மிகமுக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

அதேபோல் அணியின் பந்துவீச்சில் அக்ஸர்  படேல், குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் இருந்தாலும், முகேஷ் குமார், கலீத் அஹ்மத், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே போன்ற வீரர்கள் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். இதனால் நாளைய போட்டியில் நட்சத்திர வீரர்கள் ஃபார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்துள்ள டெல்லி அணி முதல் வெற்றியைப் பதிவுசெய்ய போராடும் என்பதால் நாளைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. 

அதேசமயம் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் உள்ளது. அணியின் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷிவம் தூபே, அஜிங்கியா ரஹானே, சமீர் ரிஸ்வி போன்ற வீரர்கள் வலுசேர்க்கின்றனர். 

Advertisement

பந்துவீச்சை பொறுத்தவகையில் ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரனா, முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுடன் தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே, டேரில் மிட்செல் போன்ற வீரர்களும் பந்துவீச்சில் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இரண்டு வெற்றிகளை குவித்துள்ள சிஎஸ்கே அணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்யும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்

விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானமானது வரலாற்றில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் இத்தொடரில் இங்கு நடைபெறும் முதல் போட்டி இது என்பதும் கூடுதல் சிறப்பு. இதனால் பேட்டர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துவது ரன்களை சேர்க்க உதவும். இதனால் இங்கு டாஸ் வெல்லு கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

Advertisement

நேரலை 

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 29
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 19
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 10
Advertisement

உத்தேச லெவன் 

டெல்லி கேப்பிட்டல்ஸ்:  டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிக்கி புய், ரிஷப் பந்த் (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஸர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, முகேஷ் குமார், கலீல் அகமது

சென்னை சூப்பர் கிங்ஸ்: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கே), அஜிங்கியா ரஹானே, ஷிவம் துபே, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தஃபிசூர் ரஹ்மான்.

Advertisement

ஃபேண்டஸி லெவன்  டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ரிஷப் பந்த்(துணைக்கேப்டன்)
  • பேட்டர்ஸ்: டேவிட் வார்னர், ஷிவம் துபே, ரச்சின் ரவீந்திரா(கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட்
  • ஆல்-ரவுண்டர்கள்: அக்சர் படேல், டேரில் மிட்செல்
  • பந்துவீச்சாளர்கள்: முஸ்தஃபிசூர் ரஹ்மான், குல்தீப் யாதவ், கலீல் அகமது, மதீஷா பத்திரனா

DC vs CSK IPL 2024 Dream11 Prediction, Today Match DC vs CSK, DC vs CSK Dream11 Team, Fantasy Cricket Tips, DC vs CSK Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Delhi Capitals vs Chennai Super Kings

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News