Delhi Capitals vs Lucknow Super Giants, IPL 2024 Dream11 Team: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கேகேஆர் அணி மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில் மீதமுள்ள மூன்று இடங்களுக்கான போட்டி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில் நாளை நடைபெறும் 64ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் லக்னோ அணி எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே 16 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்யும் என்ற நெருக்கடியில் உள்ளது. அதேசமயம் மறுபக்கம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியோ இந்த போட்டியில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்வதுடன், மற்ற அணிகளின் வெற்றி தோல்வி முடிவில் பிளே ஆஃப் வாய்ப்பை எதிர்பார்த்து காத்துள்ளது. இதனால் நிச்சயம் இப்போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

DC vs LSG: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

DC vs LSG, Pitch Report

இந்தப் போட்டி டெல்லியில் உள்ள  அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த சீசனில் இங்கு நடைபெற்ற லீக் போட்டியில் இமலய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டது. மேலும் இங்குள்ள பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்கள் தங்கள் ஷாட்டுகளை தேர்வு செய்து விளையாட ஏதுவாக இருக்கும். மேலும் இங்கு இரவு நேரத்தில் பனியின் தாக்கம் இருந்தாலும் அது பெரிதளவில் பந்துவீச்சாளர்களுக்கு கை கொடுக்காது என்பதால், டாஸ் வெல்லும் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம். 

DC vs LSG Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 04
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 01
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 03

DC vs LSG Where to Watch?

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

Delhi Capitals vs Lucknow Super Giants Probable Playing XI

Delhi Capitals Probable Playing XI: ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், ரிஷப் பந்த் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல்,ரசிக் சலாம், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.

Advertisement

Lucknow Super Giants Probable Playing XI: கேஎல் ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், குர்னால் பாண்டியா, ஆயுஷ் பதோனி, யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், மொஹ்சின் கான்.

DC vs LSG, Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - கேஎல் ராகுல் (துணை கேப்டன்), நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த், அபிஷேக் போரல்
  • பேட்ஸ்மேன்கள் - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்ரவுண்டர் - மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல்
  • பந்துவீச்சாளர்கள் - குல்தீப் யாதவ், கலீல் அகமது, நவீன் உல் ஹக்.

DC vs LSG Dream11 Prediction, Today Match Prediction, Today Match DC vs LSG, DC vs LSG Dream11 Team, Fantasy Cricket Tips, DC vs LSG Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Delhi Capitals vs Lucknow Super Giants

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News