இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 55ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுகான வாய்ப்பில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

பிட்ச் ரிப்போர்ட்

இந்தப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த சீசனில் இங்கு நடைபெற்ற லீக் போட்டியில் இமலய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டது. மேலும் இங்குள்ள பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்கள் தங்கள் ஷாட்டுகளை தேர்வு செய்து விளையாட ஏதுவாக இருக்கும். மேலும் இங்கு இரவு நேரத்தில் பனியின் தாக்கம் இருந்தாலும் அது பெரிதளவில் பந்துவீச்சாளர்களுக்கு கை கொடுக்காது என்பதால், டாஸ் வெல்லும் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 28
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 13
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 15

நேரலை

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிருத்வி ஷா, ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், ரிஷப் பந்த் (கேப்டன்), அக்ஸர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்தீப் யாதவ், ரசிக் சலாம், லிசாத் வில்லியம்ஸ், கலீல் அகமது.

Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மையர், ரோவ்மன் பாவல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (துணை கேப்டன்), ரிஷப் பந்த்
  • பேட்ஸ்மேன்கள் - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்ரவுண்டர் - அக்சர் படேல், ரியான் பராக்
  • பந்துவீச்சாளர்கள் - டிரென்ட் போல்ட், அவேஷ் கான், குல்தீப் யாதவ்.

DC vs RR Dream11 Prediction, Today Match Prediction, Today Match DC vs RR, DC vs RR Dream11 Team, Fantasy Cricket Tips, DC vs RR Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Delhi Capitals vs Rajasthan Royals

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News