இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement

இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மா 39 ரன்னும், சுப்மன் கில் 36 ரன்னும் எடுத்தனர். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் விராட் கோலி பொறுப்புடன் விளையாடி 46 ரன்னில் அவுட்டானார். 

Advertisement

இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, பர்கர், நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்நிலையில், 98 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. டீன் எல்கர் 12 ரன்னும், டி சோர்ஜி ஒரு ரன்னும், ஸ்டப்ஸ் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில், முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சில் 17 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. மார்கிரம் 36 ரன்னுடன் களத்தில் உள்ளார். இந்தியா சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் எடுத்த நிலையில் முகேஷ் குமார் பந்துவீச்சில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். ஆவர் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய நிலையில் விராட் கோலி மைதானத்திலிருந்த அனைவரிடமும் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் படி கேட்டுக்கொண்டார்.

 

Advertisement

இதையடுத்து மைதானத்திலிருந்த அனைவரும் எழுந்து நின்று கரகோஷங்களுடன் மரியாதை கொடுத்தனர். மேலும் களத்திலிருந்த விராட் கோலி, டீன் எல்கரை கட்டியணைத்து சில வார்த்தைகளை அவரிடம் கூறி அவரை வழியனுப்பி வைத்தார். இந்நிலையில் டீன் எல்கரை வழியனுப்பி வைத்த விராட் கோலியின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News