இலங்கையில் நடைபெற்று வரும், இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Advertisement

இத்தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் போட்டியில் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியை எதிர்த்து ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணியும் சமபலத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியின் சிறந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இப்போட்டியில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை எனும் பெருமையைப் பெறவுள்ளார். 

முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பாந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இலங்கை மகளிர் அணிக்கு எதிராக 25 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை கைப்பற்றியதே இதுநாள்வரை சாதனையாக இருந்து வருகிறது. அதேசமயம் தீப்தி சர்மா 13 போட்டிகாளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்திலும், நீது டேவிட் 12 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராக உருவாகியுள்ள தீப்தி சர்மா இந்திய அணிக்காக இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் 20 விக்கெட்டுகளையும், 105 ஒருநாள் போட்டிகளில் 135 விக்கெட்டுகளையும், 124 டி20 போட்டிகளில் 138 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீராங்கனை எனும் பெருமையையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Sri Lanka Women Probable Playing XI: ஹாசினி பெரேரா, சாமரி அத்தபத்து (கேப்டன்), ஹர்ஷிதா சமரவிக்ரம, விஷ்மி குணரத்னே, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, தேவ்மி விஹங்கா, மல்கி மதரா, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீர.

Advertisement

Also Read: LIVE Cricket Score

India Women Probable Playing XI: பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, காஷ்வி கவுதம், அருந்ததி ரெட்டி, ஸ்நே ராணா, நல்லபுரெட்டி சரணி.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News