இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் ஜூன் 28ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியைத் தழுவுள்ள இங்கிலாந்து அணி இப்போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.  

Advertisement

இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய இங்கிலாந்து வீரர் ஸாக் கிரௌலி, “நாங்கள் வெற்றி பெறுவோம். லார்ட்ஸ் பிட்ச் எங்களுக்கு கொஞ்சம் அதிகமாக சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனவே லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். ஆஸ்திரேலியாவுக்கு முதல் டெஸ்ட்டில் நெருக்கடி கொடுத்தோம். அதனால்தான் அந்தத் தோல்வியை மற்ற தோல்விகளை விட சாதகமாகப் பார்க்கிறோம். அந்த டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டுக்கு பிரமாதமானது. ஸ்கை ஸ்போர்ட்ஸிற்கு வரலாறு காணாத பார்வையாளர்கள் வந்திருந்தனர். 

ஆகவே அந்த டெஸ்ட் போட்டி ஒரு கிரேட் டெஸ்ட் போட்டி. எங்களுக்கு ஆட்டத்தின் முடிவுகள் பற்றி கவலை கிடையாது. ஆனால் அதைப்பற்றியும் பேசுவோம். வெற்றி பெறுவது, தோல்வி அடைவது பற்றியல்ல எங்களது பார்வை. பொழுதுபோக்கு தான் எங்கள் நோக்கம். ஆனால் வெற்றி பெறவே ஆடுவது எங்கள் கிரிக்கெட் பிராண்டுக்கு நல்லது. வெற்றி பெற்றால் அதிக ஈர்ப்பு எங்கள் மீது ஏற்படும்.

5 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் ஒரு போட்டியை இழந்தோம் அவ்வளவுதான். டெஸ்ட்டை இழந்தாலும் நிறைய மரியாதையைச் சம்பாதித்துள்ளோம். நிறைய எங்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இது கிரிக்கெட் ஆட்டத்திற்கு நல்லது. பாட் கமின்சை முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தது அவர்களுக்கான மெசேஜ். மிடில் ஆஃப் த பேட்டில் பட்டு சென்றது என் அதிர்ஷ்டம்.

நாம் நமக்காக ஆடும்போது பிரஷர் ஏற்படுவதில்லை. சக வீரர்களுக்காக ஆடும்போது நிச்சயம் பிரஷர் ஏற்படும். என் பிரஷர் என்னவெனில் அணிக்காக விரைவு கதியில் ஒரு ஸ்டார்ட் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே. என் பிரஷர் மீடியா என் மீது போடும் பிரஷர் அல்ல, என் அணிக்காக நான் நல்ல தொடக்கத்தை, விரைவு தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே என் பிரஷர்.

Advertisement

இந்தத் தொடரில் வாக்குவாதங்கள் ஏற்படவே செய்யும் எட்ஜ்பாஸ்டனில் அவர்கள் பேசியது ரசிகர்களின் கத்தலினால் காதில் விழவில்லை. ஆனால் லார்ட்ஸ் ரசிகர்கள் கொஞ்சம் அமைதியானவர்கள் என்பதால் ஆஸ்திரேலியர்களின் வாய் வார்த்தைகள் நிச்சயம் கேட்கும். அது சுவாரஸியம்தான், அது நமக்கு மேலும் ஊக்கமளிக்கவே செய்யும்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News