Delhi Capitals vs Mumbai Indians Dream11 Prediction, WPL 2025 Eliminator: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்த எட்டு அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் முன்னேறி அசத்தியுள்ளன. 

Advertisement

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி இன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறை இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு முறையும் இறுதிப்போட்டியில் அந்த அணி தோல்வியைத் தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது.

Advertisement

இதனால் இம்முறையாவது அந்த அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடரின் முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்நிலையில் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிகுள் நுழைந்துள்ளது. இதனால் இம்முறையும் அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். 

DEL-W vs MUM-W: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் -  பிரபோர்ன் கிரிக்கெட் மைதானம், மும்பை
  • நேரம் - மார்ச் 15, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

DEL-W vs MUM-W, Pitch Report

டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் இந்த போட்டி மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்றுள்ள 11 டி20 போட்டிகளில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணி 5 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 6 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 165 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 209 ரன்களாக உள்ளது. 

Advertisement

DEL-W vs MUM-W: Where to Watch?

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

DEL-W vs MUM-W Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 07
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 04
  • மும்பை இந்தியன்ஸ் - 03
Advertisement

DEL-W vs MUM-W, Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - யாஸ்திகா பாட்டியா
  • பேட்ஸ்மேன்கள் - மெக் லெனிங், ஹர்மன்பிரீத் கவுர், ஷஃபாலி வர்மா
  • ஆல்-ரவுண்டர்கள் - ஜெஸ் ஜோனசென், ஹீலி மேத்யூஸ் (கேப்டன்), நாட் ஸ்கைவர் பிரண்ட் (துணை கேப்டன்), மரிஸான் கேப், அமெலியா கெர், அனாபெல் சதர்லேண்ட்
  • பந்து வீச்சாளர் - ஷிகா பாண்டே.

Delhi Capitals Women vs Mumbai Indians Women Probable Playing XI

Delhi Capitals Women Probable Playing XI: ஷஃபாலி வர்மா, மெக் லானிங் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனபெல் சதர்லேண்ட், மரிஸான் கேப், ஜெஸ் ஜோனசென், சாரா பிரைஸ் (WK), ஷிகா பாண்டே, டைட்டாஸ் சாது, மின்னு மணி, நிக்கி பிரசாத்.

Advertisement

Mumbai Indians Women Probable Playing XI: ஹீலி மேத்யூஸ், அமெலியா கெர், நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), அமன்ஜோத் கவுர், யாஸ்திகா பாட்டியா, சஜீவன் சஜ்னா, ஜி கமாலினி, சமஸ்கிருதி குப்தா, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.

DEL-W vs MUM-W Dream11 Prediction, DEL-W vs MUM-W, DEL-W vs MUM-W Dream11 Team, Fantasy Cricket Tips, WPL 2025, DEL-W vs MUM-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Delhi Capitals Women vs Mumbai Indians Women

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News