Delhi Capitals vs Up Warriorz Dream11 Prediction, WPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பென்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதனால் அதே ஆதிக்கத்தை டெல்லி அணி இப்போட்டியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் யுபி வாரியர்ஸ் அணி அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்வதால் முதல் வெற்றிக்காக அந்த அணி கடுமையாக போராடும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

DEL-W vs UP-W: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்-  டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் vs யுபி வாரியர்ஸ் மகளிர்
  • இடம் -  எம் சின்ன்சாமி கிரிக்கெட் மைதானம், பெங்களூரு
  • நேரம் - பிப்ரவரி 22, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

DEL-W vs UP-W Head To Head Record

  • மொத்தம் - 05
  • டெல்லி கேபிடல்ஸ் - 04
  • யுபி வாரியர்ஸ் – 01

DEL-W vs UP-W, Pitch Report

டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் மற்றும் யுபி வாரியர்ஸ் மகளிர் மோதும் இந்த போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்றுள்ள 18 சர்வதேச டி20 போட்டிகளில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணி 7 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 9 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 141 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 212 ரன்கள் உள்ளது. மேலும் இங்குள்ள பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்களுக்கு அதிக சாதகத்தை வழங்கும். 

Advertisement

DEL-W vs UP-W: Where to Watch?

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

DEL-W vs UP-W, Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - சாரா பிரைஸ்
  • பேட்ஸ்மேன்கள் - மெக் லெனிங், கிரேஸ் ஹாரிஸ், ஷெஃபாலி வர்மா
  • ஆல்-ரவுண்டர்கள் - ஜெஸ் ஜோனாசென், மாரிஸான் கேப், தீப்தி சர்மா (கேப்டன்), தஹ்லியா மெக்ராத், அனபெல் சதர்லேண்ட் (துணை கேப்டன்)
  • பந்து வீச்சாளர்கள் - சோஃபி எக்லெஸ்டோன், ஷிகா பாண்டே.
Advertisement

Delhi Capitals Women vs Up Warriorz Women Probable Playing XI

Up Warriorz Women Probable Playing XI : விருந்தா தினேஷ், கிரேஸ் ஹாரிஸ், தஹ்லியா மெக்ராத், கிரண் நவ்கிரே, உமா சேத்ரி, தீப்தி சர்மா (கேப்டன்), சோஃபி எக்லெஸ்டோன், அலானா கிங், ஸ்வேதா சஹ்ராவத், சைமா தாக்கூர், கிராந்தி கவுட்.

Delhi Capitals Women Probable Playing XI: மெக் லெனிங் (கேப்டன்), ஷெஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனபெல் சதர்லேண்ட், ஜெஸ் ஜோனாசென், மாரிஸான் காப், சாரா பிரைஸ், ஷிகா பாண்டே, ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, மின்னு மணி.

Advertisement

DEL-W vs UP-W Dream11 Prediction, DEL-W vs UP-W, DEL-W vs UP-W Dream11 Team, Fantasy Cricket Tips, WPL 2025, DEL-W vs UP-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Delhi Capitals Women vs Up Warriorz Women

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News