இந்தியாவில் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொடருக்கு முன்னதாக பல்வேறு அணிகளைச் சேர்த்த பல முன்னணி வீரர்களும் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியது அணிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தொடரிலிருந்து விலகிய வீரர்களுக்கான மாற்று  வீரர்களை தேர்வு செய்யும் முயற்சியில் அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

Advertisement

அந்தவகையில் தனிப்பட்ட காரணங்களினால் ஐபிஎல் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் விலகினார். முன்னதாக நடந்து முடிந்த வீரர்கள் ஏலத்தில் ஹாரி ப்ரூக்கை ரூ.4 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ஹாரி ப்ரூக், 11 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 190  ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.

Advertisement

இதனால் அவர் வீரர்கள் ஏலத்திற்கு முன்னரே ஹைதராபாத் அணி கழட்டிவிட்டது. இந்நிலையில் தான் வீரர்கள் மினி ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. இதன் காரணமாக அவர் டேவிட் வார்னருடன் இணைந்து தொடக்க வீரராகவோ அல்லது நான்காம் இடத்திலோ களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடரிலிருந்தே ஹாரி ப்ரூக் விலகியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில் ஹாரி ப்ரூக்கிற்கு மாற்றாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் லிசாத் வில்லியம்ஸை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் அவரது அடிப்படி தொகையான ரூ.50 லட்சத்திற்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை ஒப்பந்தம் செய்துள்ளது. முன்னதாக நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News