இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ் போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. மேலும் இத்தொடரின் மூலம் டெஸ்ட் போட்டிகளுக்கு அறிமுகமான நியூசிலாந்து வீரர் டேவன் கான்வே தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். 

Advertisement

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் டேவன் கான்வே விளையாடும் காலம் வெகுதொலைவில் இல்லை என அவரது பயிற்சியாளர் கிளென் பொக்னால் தெரிவித்துள்ளார். 

Advertisement

இதுகுறித்து பேசிய பொக்னால், “நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டேவன் கான்வேவை எந்த அணியும் ஏலம் எடுக்கததைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் அவரது நேரம் வரும் போது அவருக்கான வாய்ப்பு தேடி வரும் என்பதில் உறுதியாக இருந்தேன். 

மேலும் ஐபிஎல் தொடரில் டேவன் கான்வே மும்பை இந்தியஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது ஆசை. ஏனெனில் ரோஹித் சர்மாவுடன் டேவன் கான்வே இணைந்து விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

ஐ.பி.எல். இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக டெவன் கான்வே விளையாடுவதை க்ளென் போக்னெல் விரும்புகிறார். இதனுடன், ரோஹித் சர்மாவும் கான்வேவும் ஒன்றாகத் திறப்பதைக் காண வேண்டும் என்பது அவரது கனவு. ஒரு வலைத்தளத்துடனான உரையாடலின் போது, ​​போக்னல், '2021 ஐ.பி.எல் ஏலத்தில் விற்கப்படாதது குறித்து அவர் பெரிதும் ஆச்சரியப்படவில்லை. அவரது நேரம் வரும், நான் உறுதியாக நம்புகிறேன்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News