பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்தது.  இப்போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதுடன், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.

Advertisement

இதன் காரணமாக இந்திய அணி இத்தொடரை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.  இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்கான இந்திய அணியிலிருந்து பும்ரா, கேஎல் ராகுல் ஆகியோர் விலகியுள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும், தங்களது அறிமுக போட்டியில் அசத்திய சர்ஃப்ராஸ், துருவ் ஜுரெல் ஆகியோர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

ஏனெனில் தங்களது அறிமுக போட்டியில் விளையாடிய சர்ஃப்ராஸ் கான் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தும், துருவ் ஜுரெல் 46 ரன்களைச் சேர்த்ததுடன், பென் டக்கெட்டை ரன் அவுட் செய்தும் கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்நிலையில் பிசிசிஐ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த காணொளி ஒன்றில் அறிமுக வீரர் துருவ் ஜூரல் பேசிய காணொளியை வெளியிட்டிருந்தது. அதில் துருவ் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை மீண்டும் சந்திக்க ஆவலுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

 

அந்து காணொளியில் பேசிய துருவ் ஜுரெல், “ஒரு சர்வதேச போட்டிக்குப் பிறகு எம்எஸ் தோனியை சந்திக்க வேண்டும் என்பது என் கனவு. நான் அவருடன் பேசும்போதெல்லாம் அவரிடம் இருந்து புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்கிறேன். ராஞ்சியில் நடக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் துருவ் ஜுரெலின் இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News