தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த தினேஷ் கார்த்திக்கு; தோனி, கங்குலிக்கு இடமில்லை!

Updated: Thu, Aug 15 2024 14:38 IST
Image Source: Google

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக். இந்திய அணிக்காக கடந்த 2004ஆம் ஆண்டு அறிமுகமான தினேஷ் கார்த்திக் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 17 அரைசதங்களுடன் மூன்றாயிரத்திற்கும் அதிகமான ரன்களைச் சேர்த்துள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 22 அரைசதங்களுடன் 4,842 ரன்களைக் குவித்துள்ளார். 

இதையடுத்து கடந்த ஜூன் மாதம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து தொலைக்காட்சி வர்ணனையாளராகவும், அடுத்த ஆண்டு எஸ்ஏ20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளார். இந்நிலையில் அவர், இந்திய அணியின் தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார். 

அதன்படி, தினேஷ் கார்த்திக் தேர்வு செய்துள்ள அணியின் தொடக்க வீரர்களாக விரேந்திர சேவாக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரைத் தேர்வுசெய்துள்ளார். மேற்கொண்டு மூன்றாம் வரிசையில் ராகுல் டிராவிட்டையும், நான்காம் இடத்தில் சச்சின் டெண்டுல்கரையும் தேர்வு செய்துள்ள அவர், ஐந்தாம் இடத்தில் விராட் கோலியையும், ஆறாம் இடத்தியில் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கையும் தேர்வுசெய்துள்ளார். 

மேற்கொண்டு அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, அனில் கும்ப்ளே மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ள தினேஷ் கார்த்திக், வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜாகீர் கானை தேர்வுசெய்ள்ளது. அதேசமயம் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்துள்ளர். மேற்கொண்டு அணியின் 12ஆவது வீரராக ஹர்பஜன் சிங்கை தேர்வுசெய்துள்ளார். 

இந்த அணியில் இந்திய அணிக்கு டி20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைகளை பெற்றுக்கொடுத்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி ஆகியோருக்கு தினேஷ் கார்த்திக் தனது அணியில் இடம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த அணியில் தனது பெயரையும் அவர் சேர்த்துக்கொள்ளவில்லை. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

தினேஷ் கார்த்திக் தேர்வு செய்த லெவன்: வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அனில் கும்ப்ளே, ஜஸ்பிரித் பும்ரா. ஜாகீர் கான். 12 வீரர் - ஹர்பஜன் சிங்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை