விஜய் ஹசாரே கோப்பை 2023: தமிழ்நாடு அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்; ரசிகர்கள் விமர்சனம்!

Updated: Thu, Nov 09 2023 21:03 IST
விஜய் ஹசாரே கோப்பை 2023: தமிழ்நாடு அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்; ரசிகர்கள் விமர்சனம்! (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். அதில் சிறப்பாக செயல்பட்ட அவர் அணியில் தனது இடத்தை உறுதி படுத்திக்கொண்டதோடு டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றார். ஆனால், அதன்பின்னர் அவருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டதால் தற்போது வர்ணனையாளராக பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடருக்காக தமிழ்நாடு அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 தொடரான சையது முஷ்டாக் அலி டி20 தொடரிலேயே தினேஷ் கார்த்திக் இடம்பெறுவார் என கூறப்பட்டது. ஆனால், அந்த தொடருக்கான அணியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அடுத்து நடைபெறவுள்ள விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சீனியர் வீரர் அணிக்கு வேண்டும் என்பதால் தினேஷ் கார்த்திக் தமிழ்நாடு அணியில் இடம்பிடித்துள்ளார். அதோடு அவருக்கு அணி கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தையும் எழுப்பியுள்ளது. 

ஏனெனில், தினேஷ் கார்த்திக் 38 வயதான நிலையில், தமிழ்நாடு அணியில் இளம் வீரர்களுக்கு வழி விட வேண்டும் எனக் கூறி வருகின்றனர் அப்படியே அவர் ஐபிஎல் தொடருக்கு தயாராக விரும்பினால் உள்ளூர் டி20 தொடரில் விளையாடி இருக்க வேண்டும். உள்ளூர் டி20 தொடர் மற்றும் உள்ளூர் ஒருநாள் தொடர் இரண்டிலும் அவர் விளையாடி இருந்தால் கூட பரவாயில்லை. தன் வர்ணனையாளர் பணி பாதிக்கப்படும் என்பதால் டி20 தொடரை விட்டுவிட்டு, ஒருநாள் தொடரில் மட்டும் ஆடுவது சரியில்லை என கூறி வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை