வெஸ்ட் இண்டீஸின் டி20 லீக் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜான்சன் சார்லஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.  இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டூ பிளெசிஸ் அரைசதம் கடந்து அசத்தினார்.

Advertisement

அதன்பின் 57 ரன்கள் எடுத்த நிலையில் டூ பிளெசிஸ் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 37 ரன்களைச் சேர்த்திருந்த ஜான்சன் சார்சலும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ராஜபக்‌ஷாவும் 15 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பிறகு களமிறங்கிய சிக்கந்தர் ரஸா அதிரடியாக விளையாடி 32 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழ்னதார். 

பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது. நைட்ரைடர்ஸ் அணி தரப்பில் டுவைன் பிராவோ, ஆண்ட்ரே ரஸல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 7 ரன்களுக்கும்,வால்டன், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான மார்க் தயாலும் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் களமிறங்கிய கேப்டன் பொல்லார்ட் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்து, மறுபக்கம் களமிறங்கிய டுவைன் பிராவோ, அகீல் ஹொசைன், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து பொல்லார்டும் 34 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இதனால் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 14.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லூசியா கிங்ஸ் தரப்பில் கெரி பியரி 4 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் சேஸ், சிக்கந்தர் ரஸா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News