இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை மறுதினம் 26 ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்க உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் ஏற்கனவே கடந்த பல நாட்களாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பிளேயிங் லெவனில் யார்? யார்? இடம்பிடிக்கப்போகிறார்கள் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. 

Advertisement

அண்மையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்கள் தற்போது அணிக்கு திரும்பி உள்ளதால் அணியின் தேர்வு எவ்வாறு இருக்கப் போகிறது என்றும் பந்துவீச்சாளர்கள் எப்படி தேர்வு செய்யப்பட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

Advertisement

அந்த வகையில் தற்போது அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வரும் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக இளம்வீரர் முகமது சிராஜ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இஷாந்த் சர்மாவிற்கு தற்போது காயம் அதிகமாக அவரை வாட்டி வருகிறது. அதுமட்டுமின்றி அவரது ஃபார்மும் முன்பு போன்று சிறப்பானதாக இல்லை.

எனவே அவருக்கு பதிலாக சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அசத்தலாக செயல்பட்டு வரும் சிராஜ்-க்கு வாய்ப்பினை வழங்கலாம். ஏனெனில் அவர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட அசத்தலான பந்துவீச்சினை வெளிப்படுத்தினார். என்னை பொருத்தவரை இசாந்த் சர்மாவிற்கு பதிலாக நான் சிராஜ்ஜை தான் அணியில் தேர்ந்தெடுப்பேன்.

இந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது நான்கு பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க விரும்பினால் பும்ரா, ஷமி, அஷ்வின் மற்றும் சிராஜ் ஆகிய 4 பவுலர்களுடன் தான் இந்த போட்டியில் இந்திய அணி விளையாட வேண்டும்” தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News