அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவான் கான் மற்றும் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

Advertisement

இருவரும் இணை தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல் விகெட்டிற்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், டெவான் கான்வே 39 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஆரோன் ஹார்டி 02 ரன்களிலும், மார்கஸ் டொய்னிஸ் 29 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளிக்க, மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய டூ பிளெசிஸ் சதமடித்து மிரட்டினார். 

Advertisement

அதன்பின் சதமடித்த கையோடு டூ பிளெஸிஸும் 12 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 100 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற, டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்களை மட்டுமே எடுத்தது. வாஷிங்டன் ஃப்ரீடம் அணி தரப்பில் சௌரப் நேத்ரவால்கர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய வஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு டிராவிஸ் ஹெட் - ஸ்டீவ் ஸ்மித் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அசத்தினர். இதில் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் ஸ்டீவ் ஸ்மித் 13 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 26 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 12 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்களையும் சேர்த்தனர்.

இதன்மூலம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியானது 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 62 ரன்களைச் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டதது. அதன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 ஓவர்கள் பந்துவீசப்படாததாலும், இப்போட்டியானது முடிவின்றி அமைந்ததாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர். இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News