ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெஸர்ட் வைப்பர்ஸ் அணியில் தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் மேக்ஸ் ஹொல்டன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய அலெக்ஸ் ஹேல்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். 

Advertisement

அதன்பின் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலெக்ஸ் ஹேல்ஸ் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ் ஹொல்டனும் 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் டேன் லாரன்ஸ் 34 ரன்களையும், சாம் கரண் 24 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது. கேப்பிட்டல்ஸ் தரப்பில் கைஸ் அஹ்மத், குல்பதின் நைப் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஆடம் ரோஸிங்டன் - ஷாய் ஹோப் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் ஷாய் ஹோப் 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குல்பதின் நைபும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆடம் ரோஸிங்டன் 44 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

பின்னர் குல்பதினுடன் ஜோடி சேர்ந்த சாம் பில்லிங்ஸும் அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தினார். இதில் குல்பதின் நைப் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரோவ்மன் பாவெலும் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 20 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தனார். மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த குல்பதின் நைபும் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 62 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தாலும், அணியின் வெற்றியை உறுதிசெய்திருந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இறுதியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் நடப்பு ஐஎல்டி20 தொடரின் இறுதிப்போட்டிக்கு துபாய் கேப்பிட்டல்ஸ் முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்பதின் நைப் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News