EN-U19 vs IN-U19, 4th ODI: இங்கிலாந்து அண்டர்19 அணிக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் விஹான் மல்ஹோத்ரா ஆகியோர் சதமடித்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கும் உதவினர்.

Advertisement

இந்திய அண்டர்19 அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டிகள் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வொர்செஸ்டரில் நேற்று நடைபெற்ற நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து இங்கிலாந்து அணியை பந்துவீச அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ஆயூஷ் மாத்ரே ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய விஹான் மல்ஹோத்ரா ஒரு ரன்னிலும், வைபவ் சூர்யவன்ஷி 33 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் அம்ரிஷ் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 66 ரன்களைச் சேர்த்தார். இதன் காரணமாக இந்திய யு19 அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஃபிரெஞ்ச் மற்றும் ரால்ஃபி ஆல்பர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து யு19 அணியில் தொடக்க வீரர் ஜோசப் மூர்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த பென் டௌகின்ஸ் மற்றும் பென் மேயஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களின் அரைசதங்களை கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 66 ரன்களில் பென் டௌகின்ஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஃபிலின்டாஃபும் 4 ரன்னில் நடையைக் கட்டினார். 

Also Read: LIVE Cricket Score

பின்னர் பென் மேயஸுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தாமஸ் ரீவும் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பென் மேயஸ் 82 ரன்களையும், கேப்டன் தாமஸ் ரீவ் 49 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இங்கிலாந்து யு19 அணி 31.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய யு19 அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இருப்பினும் இந்திய யு19 அணியானது 3-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News