ENG vs IND, 2nd Test: வெறுப்பேற்றிய இங்கிலாந்து; அரைசதமடித்து பதிலளித்த ஷமி!

Updated: Mon, Aug 16 2021 18:02 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 4ஆம் நாளில் இங்கிலாந்து அணி சிறப்பாகப் பந்துவீசியது. 

4ஆம் நாள் முடிவில் இந்திய அணி, 82 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.  ரிஷப் பந்த் 14, இஷாந்த் சர்மா 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

அதன்பின் 5ஆம் நாளான இன்று, ஆண்டர்சன் ஓவரில் ரிஷப் பந்த் ஒரு பவுண்டரி அடித்தார். பிறகு அதே ஓவரில் இஷாந்த் சர்மாவும் ஒரு பவுண்டரி அடிக்க இந்திய ரசிகர்கள் குஷியானார்கள். ஆனால் ரிஷப் பந்த் 22 ரன்களிலும் இஷாந்த் சர்மா 16 ரன்களிலும் ஒல்லி ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு பும்ராவும் ஷமியும் கூட்டணி சேர்ந்தார்கள்.

முதல் இன்னிங்ஸில் ஆண்டர்சனுக்கு பும்ரா பவுன்சர் வீசியதை மனத்தில் வைத்துக்கொண்டு அதேபோல பவுன்சர் பந்துகளை வீசி நெருக்கடி கொடுத்தார்கள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள். பும்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். பும்ரா நடுவரிடம் முறையிட்டார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வுட் வீசிய பவுன்சர் பந்து பும்ராவின் ஹெல்மெட்டில் பட்டது. 

இதனால் பேட்டிங்கில் அதிகக் கவனம் செலுத்திய இருவரும் முக்கியமான ரன்களைச் சேர்த்தார்கள். இதனால் இந்திய அணி 200 ரன்கள் முன்னிலை பெற்றது. விக்கெட்டுகள் எடுப்பதில் கவனம் செலுத்துவதை விட பும்ராவை வெறுப்பேற்றுவதில் இங்கிலாந்து வீரர்கள் ஆர்வம் செலுத்தியதால் அதற்கான விளைவுகளைச் சந்தித்தார்கள்.

இதில் முகமது ஷமி அரைசதம் கடந்தும் அசத்தினார். இதன்மூலம் ஐந்தாம்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஷமி 52 ரன்களுடனும், பும்ரா 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை