ENG vs IND, 4th Test: அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்; இங்கிலாந்து அபாரம்!

Updated: Thu, Sep 02 2021 17:56 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - கே.எல்.ராகுல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 4 ரன்களில் புஜாராவும் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

அதைத்தொடர்ந்து கோலியுடன் இணைது விளையாடிவந்த கே.எல்.ராகுலும் 17 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனால் 39 ரன்களிலேயே இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

அதன்பின் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். இதனால் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்களைச் சேர்த்துள்ளது. 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இந்திய அணி தரப்பில் கேப்டன் கோலி 18 ரன்களுடனும், ஜடேஜா 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ராபின்சன், வோக்ஸ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை