இரண்டாவது டெஸ்ட்டில் பென் டக்கெட் விளையாடுவது சந்தேகம்; கூடுதல் வீரர் பட்டியலில் டேன் லாரன்ஸ்!

Updated: Wed, Jul 17 2024 23:27 IST
Image Source: Google

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது. 

இதையடுத்து இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் பக்கேற்கும் இரு அணியின் பிளேயிங் லெவனும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள தொடக்க வீரர் பென் டக்கெட் தனது மனைவின் குழந்தைப் பிறப்பின் காரணமாக இப்போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் தற்சமயம் எழுந்துள்ளது. 

இதுகுறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “எங்கள் அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் தனது குழைந்த பிறப்பிற்காக காத்திருக்கிறார். இப்போட்டி தொடங்கும் முன்பு அவருக்கு குடும்பத்திலிருந்து அழைப்பு வந்தால் அவர் இப்போட்டியில் இருந்து விடுவிக்கப்படுவார். ஒருவேளை ஆட்டம் தொடங்கிய பிறகு அவருக்கு செய்தி கிடைத்தால், பென் டக்கெட் தனது வீட்டிற்கு சென்று அதன்பின் மீண்டும் அணியுடன் வந்து இணைவார். 

அவர் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட நம்பமுடியாத அளவிற்கு ஆசைப்படுகிறார். ஆனால் என்னுடைய மற்றும் அணியின் பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லமுடைய கருத்தானது எப்போதும் குடும்பம் தான் முதன்மையானது என்பதாகும். ஒருவேளை அவர் இப்போட்டியில் இருந்து விலக நினைத்தாலும், நாங்கள் அவருக்கு எங்கள் முழு ஆதரவையும் வழங்குவோம் என்பது அவருக்குத் தெரியும்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இப்போட்டியின் டாஸ் நிகழ்வுக்கு முன்னதாக பென் டக்கெட் வீடு திரும்பும் பட்சத்தில் அவருக்கான மாற்று வீரராக நாங்கள் டேன் லாரன்ஸை எங்கள் கையிருப்பில் வைத்துள்ளோம். அதனால் முடிவு எதுவாக இருந்தாலும் அது எங்களுடைய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாளைய போட்டியில் யார் விளையாடுவார் என்ற குழப்பத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் அவாலுடன் காத்திருக்கின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை