England vs Australia, 2nd T20, Dream11 Prediction: ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டியானது நாளை கார்டிஃபில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

ENG vs AUS: Match Details

Advertisement

மோதும் அணிகள் - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
இடம் - சோஃபியா கர்டன்ஸ், கார்டிஃப்
நேரம் - செப்டம்பர் 13, இரவு 11 மணி (இந்திய நேரப்படி)

ENG vs AUS: Live Streaming Details

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் சோனி லிவ் ஓடிடி தளத்தியின் வாயிலாக இத்தொடரை நேரலையில் காண முடியும். 

ENG vs AUS: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 25
  • ஆஸ்திரேலியா - 12
  • இங்கிலாந்து - 11
  • முடிவில்லை - 02
Advertisement

ENG vs AUS: Pitch Report

கார்டிஃபில் உள்ள சோஃபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானமானது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான மைதானங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 145 ரன்களாக உள்ளது. இதனால் இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணியானது முதலில் பந்துவீசுவதை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

England vs Australia Possible Teams

Advertisement

இங்கிலாந்து அணி: வில் ஜாக்ஸ், பில் சால்ட் (கே), ஜோர்டான் காக்ஸ், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், சாம் கர்ரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாகிப் மஹ்மூத், ஆதில் ரஷித், ரீஸ் டாப்லி.

ஆஸ்திரேலிய அணி: மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேட்ச்), ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், சீன் அபோட், ஸேவியர் பார்ட்லெட், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா

ENG vs AUS 2nd T20I: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: பில் சால்ட் (துணைக்கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ்
  • பேட்டர்ஸ்: டிராவிஸ் ஹெட், லியாம் லிவிங்ஸ்டோன்
  • ஆல்ரவுண்டர்கள்: மார்கஸ் ஸ்டோனிஸ் (கேப்டன்), சாம் கரன் (துணை கேப்டன்), வில் ஜாக்ஸ், கேமரூன் க்ரீன், மேத்யூ ஷார்ட்
  • பந்து வீச்சாளர்: ஆடம் ஜம்பா, ஜோஃப்ரா ஆர்ச்சர்
Advertisement

ENG vs AUS 2nd T20 Dream11 Prediction, Today Match ENG vs AUS, ENG vs AUS Dream11 Team, Fantasy Cricket Tips, ENG vs AUS Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England vs Australia

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News