England vs Australia, 3rd ODI, Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நாளை நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

ENG vs AUS 3rd ODI: Match Details

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
  • இடம் - ரிவர்சைடு மைதானம், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்
  • நேரம் - செப்டம்பர் 24, மாலை 5 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

ENG vs AUS 3rd ODI: Live Streaming Details

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் சோனி லிவ் ஓடிடி தளத்தியின் வாயிலாக இத்தொடரை நேரலையில் காண முடியும். 

ENG vs AUS: Head-to-Head In ODIs

  • மோதிய போட்டிகள் - 158
  • ஆஸ்திரேலியா - 90
  • இங்கிலாந்து - 63
  • முடிவில்லை - 05

ENG vs AUS: Ground Pitch Report

Advertisement

இந்தப் போட்டி செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் உள்ள ரிவர்சைடு மைதானம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 25 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 13 முறை இரண்டாவதாகபேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 236 ரன்களாக ஊள்ளது. மேலும் இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 338 ரன்கள் உள்ளது. மேலும் இங்கு பேட்டர்கள் தங்கள் விருப்பம் போல் விளையாட முடியும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

England vs Australia Possible Teams

இங்கிலாந்து: பில் சால்ட்,  பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஹாரி புரூக் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தெல், ஜேமி ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், சாகிப் மஹ்மூத், ரீஸ் டாப்லி

Advertisement

ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கே), மார்னஸ் லாபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன, அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

ENG vs AUS 3rd ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: பில் சால்ட்
  • பேட்டர்ஸ்: டிராவிஸ் ஹெட் (கேப்டன்), பென் டக்கெட், ஹாரி புரூக், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷாக்னே
  • ஆல்-ரவுண்டர்கள்: லியாம் லிவிங்ஸ்டோன் (துணை கேப்டன்), கேமரூன் க்ரீன், வில் ஜேக்ஸ்
  • பந்துவீச்சாளர்கள்: ஆடம் ஸாம்பா, ஆதில் ரஷித்

ENG vs AUS 3rd ODI Dream11 Prediction, Today Match ENG vs AUS, ENG vs AUS Dream11 Team, Fantasy Cricket Tips, ENG vs AUS Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England vs Australia

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News