ENG vs IND: இங்கிலாந்து அணியில் இணையும் மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ், பில்லிங்ஸ்!

Updated: Sun, Aug 29 2021 22:19 IST
Eng vs Ind: Buttler to miss Oval Test against India, Woakes in contention (Image Source: Google)

இந்தியாவுடனான 4ஆவது டெஸ்ட் ஆட்டத்துக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளதாக பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரில் சமன்நிலையில் உள்ளன.

இந்நிலையில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காயம் காரணமாக மார்க் வுட் 3ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார். இந்நிலையில் இந்தியாவுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் மார்க் வுட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் விளையாடுவர் என இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார். 

இவை குறித்து பேசிய சில்வர்வுட்,"மார்க் வுட் நேற்று காலை பந்துவீசினார். அவர் அணியின் தேர்வுக்குத் தகுதியாக உள்ளார். வோக்ஸும் அணிக்கானத் தேர்வுக்கு மீண்டும் தகுதி பெற்றுள்ளார்.

விக்கெட் கீப்பிங் செய்யுமாறு அழைத்தால் ஜானி பேர்ஸ்டோவ் நிச்சயம் அதைச் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே உரையாடியிருக்கிறோம். விக்கெட் கீப்பிங் செய்வது அவருக்கு மகிழ்ச்சிதான்" என்று தெரிவித்துள்ளார். 

மேலும் ஜோஸ் பட்லருக்கு மாற்று வீரராக சாம் பில்லிங்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

4 வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி: ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் பில்லிங்ஸ், ரோரி பர்ன்ஸ், சாம் கர்ரன், ஹசீப் ஹமீத், டான் லாரன்ஸ், டேவிட் மாலன், கிரேக் ஓவர்டன், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், கிறிஸ் வோக்ஸ் , மார்க் வூட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை