காயத்தை சந்தித்த ஜோஷ் டங்க்; பின்னடைவை சந்திக்கும் இங்கிலாந்து

Updated: Mon, Jun 09 2025 15:38 IST
Image Source: Google

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியனது எதிர்வரும் ஜூன் 20ஆம் தேதி லீட்ஸில் நடைபெறவுள்ளது.

இதையடுத்து இத்தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி இன்று இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் இங்கிலாந்து அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இட்ம்பிடித்துள்ள ஜோஷ் டாங்க் காயத்தை சந்தித்துள்ளார்.

அதன்படி இந்திய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து லையன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜோஷ் டங்க் காயத்தை சந்தித்தார். இதுகுறித்து வெளியான தகவலின் அடிப்படையில், இரண்டாவது இன்னிங்ஸில் ஜோஷ் டங்க் நான்கு ஓவர்கள் மட்டுமே வீசிய் நிலையில் காயம் காரணமாக மைதானத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இருப்பினும் அவரது காயம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 

முன்னதாக அவர் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார், மேலும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் ஒரு அங்கமாகவும் உள்ளார். இந்நிலையில் தான் ஜோஷ் டங்க் காயத்தை சந்தித்துள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ஆர்ச்சர், அட்கின்சன் ஆகியோரும் காயம் காரணமாக இந்த அணியில் இடம்பெறாத நிலையில், ஜோஷ் டங்க்கும் காயத்தை சந்தித்துள்ளது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

தற்சமயம் 26 வயதான ஜோஷ் டங்க் கடந்த 2023ஆம் அண்டு இங்கிலந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான நிலையில், இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்குள் ஜோஷ் டங்க் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத பட்சத்தில் அது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை பலவீனப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலந்து அணி (முதல் டெஸ்ட்): பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓல்லி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்

Also Read: LIVE Cricket Score

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை