ENG vs NZ, 1st Test: நியூசிலாந்து பேட்டர்களை கதறவைத்த இங்கிலாந்து பவுலர்கள்!

Updated: Thu, Jun 02 2022 18:03 IST
ENG vs NZ 1st Test: Anderson & Potts Shake Kiwi Batting; New Zealand Score 39/6 At Lunch (Image Source: Google)

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியி டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அறிமுக வீரராக மேட்டி பாட்ஸ் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து பேட்டிங் செய்ய கலமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் வில் யங் ஆகியோர் தலா ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழ்னது ஏமாற்றமளித்தனர்,

அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கேன் வில்லியம்சன் 2 ரன்னில் எடுத்திருந்த நிலையில் மேட்டி பாட்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து டேவன் கான்வே 3 ரன்களில் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய டேரில் மிட்செல், டாம் பிளெண்டல் ஆகியோர் மாட்டி பாட்ஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து க்ளீன் போல்டாகினர்.

இதனால் முதல்நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்களை மட்டுமே எடுத்ததுள்ளது.

நியூசிலாந்து தரப்பில் காலின் டி கிராண்ட்ஹோம் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் மாட்டி பாட்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை