England vs Oman, Match 28 Dream11 Prediction, ICC T20 World Cup 2024: விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. மொத்த நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள 20 அணிகளில் எந்த 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஓமன் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஒரு தோல்வி ஒரு முடிவில்லை என ஒரு புள்ளியை மட்டுமே பெற்றுள்ளது. மறுபக்கம் ஓமன் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது. இருப்பினும் இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

ENG vs OMN: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs ஓமன்
  • இடம் - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம், ஆண்டிகுவா
  • நேரம் - ஜூன் 14, நள்ளிரவு 12.30 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

ENG vs OMN Pitch Report

ஆண்டிகுவாவில் அமைந்துள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானமானது வரலாற்றில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு மித வேகத்தில் பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். மேலும் இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோரானது 125 ரன்களாக இருந்தாலும், இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணிகளே அதிகளவு வெற்றியை ஈட்டியுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

ENG vs OMN T20I Head to Head

  • மோதிய போட்டிகள் - 00
  • இங்கிலாந்து - 00
  • ஓமன் - 00
  • முடிவில்லை - 00

ENG vs OMN: Where to Watch?

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

England vs Oman Probable Playing XI

இங்கிலாந்து உத்தேச லெவன்: பில் சால்ட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), வில் ஜேக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், மொயின் அலி, ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், மார்க் வுட்.

Advertisement

ஓமன் உத்தேச லெவன்: பிரதிக் அத்வாலே, நசீம் குஷி, அகில் இலியாஸ் (கேப்டன்), ஜீஷன் மக்சூத், காலித் கெல், இயன் கான், மெஹ்ரான் கான், ரஃபிக்யுல்லா, ஷகீல் அகமது, கலீமுல்லா, பிலால் கான்.

ENG vs OMN T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், பில் சால்ட், பிரதீக் அத்வாலே
  • பேட்ஸ்மேன்கள் - வில் ஜாக்ஸ், இயான் கான்
  • ஆல்ரவுண்டர் - ஆகிப் இலியாஸ், மொயீன் அலி
  • பந்துவீச்சாளர்கள் - மார்க் வுட், ஆதில் ரஷித், ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான்.

ENG vs OMN Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match ENG vs OMN, ENG vs OMN Dream11 Team, Fantasy  Cricket Tips, ENG vs OMN Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England vs Oman

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News