ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Mon, Jun 03 2024 19:37 IST
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)

England vs Scotland Dream11 Prediction, T20 World Cup 2024: ஐசிசி நடத்தும் 9ஆவது ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஸ்காட்லாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் போட்டி இதுவாகும். இரு அணிகளிலும் கவனிக்கத்தக்க வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

ENG vs SCO: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து
  • இடம் - கெனிங்ஸ்டன் ஓவல், பார்படாஸ்
  • நேரம் - இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

ENG vs SCO : பிட்ச் ரிப்போர்ட்

பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இதுவரை மொத்தம் 42 டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 28 போட்டிகளில், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 13 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோரானது 138 ரன்களாக இருந்தாலும், இந்த மைதானத்தில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 224 ரன்கள் உள்ளது. இதனால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

ENG vs SCO : நேருக்கு நேர்


  • மோதிய போட்டிகள் - 00

  • இங்கிலாந்து - 00

  • ஸ்காட்லாந்து - 00
  • முடிவில்லை - 00

ENG vs SCO : நேரலை

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

England vs Scotland Probable Playing XI

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பிலிப் சால்ட், வில் ஜாக், ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், மார்க் வுட்.

ஸ்காட்லாந்து: ஜார்ஜ் முன்சி, மைக்கேல் ஜோன்ஸ், ரிச்சி பெரிங்டன் (கேப்டன்), ஒல்லி ஹேய்ஸ், மேத்யூ கிராஸ், மைக்கேல் லீஸ்க், பிராண்டன் மெக்முல்லன், கிறிஸ் க்ரீவ்ஸ், சஃப்யான் ஷெரீப், மார்க் வாட், பிராட் வீல்.

ENG vs SCO T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர் (கேப்டன்), பில் சால்ட் (துணை கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - ஜார்ஜ் முன்சி, வில் ஜாக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், ரிச்சி பெரிங்டன்
  • ஆல்ரவுண்டர் - மைக்கேல் லீஸ்க்
  • பந்துவீச்சாளர்கள் - அடில் ரஷித், சஃப்யான் ஷெரீப், மார்க் வுட், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

ENG vs SCO Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match ENG vs SCO, ENG vs SCO Dream11 Team, Fantasy Cricket Tips, ENG vs SCO Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England vs Scotland

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை