England vs Sri Lanka 1st Test Dream11 Prediction: இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியான்னது நாளை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இலங்கை அணியும் டாஸ் நிகழ்வின் போது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

ENG vs SL 1st Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs இலங்கை
  • இடம் - ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர்
  • நேரம் - ஆகஸ்ட் 21, மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

ENG vs SL 1st Test Pitch Report

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு 85 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 32 வெற்றிகளை பெற்றுள்ளது. அதேசமயம், 16 போட்டிகளில் பந்துவீச்சை தேர்வு செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன.  இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் சராசரி ஸ்கோரானது 332 ரன்களாவும், நான்காவது இன்னிங்ஸின் சராசரி ஸ்கோரானது வெறும் 168 ரன்களாக உள்ளது. இங்கு பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவரும் நல்ல உதவியைப் பெறுவர்கள் என்பதால் நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

ENG vs SL 1st Test: Where to Watch?

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வர்க் நேலை ஒளிபரப்பு செய்கிறது. மேற்கொண்டு ரசிகர்கள் இத்தொடரை சோனி லிவ் ஓடிடி தளத்திலும் நேரலையில் கண்டு ரசிக்கலாம். 

Advertisement

ENG vs SL Test Head To Head Record


  • மோதிய போட்டிகள் - 36

  • இங்கிலாந்து - 17

  • இலங்கை - 08
  • முடிவில்லை - 11

England vs Sri Lanka 1st Test Probable Playing XI

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: டான் லாரன்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், மார்க் வுட், சோயிப் பஷீர்.

Advertisement

இலங்கை உத்தேச லெவன்: பதும் நிஷங்க, திமுத் கருணாரத்னே, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், தனஞ்சய டி சில்வா (கேப்டன்), கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார, அசித்த ஃபெர்னாண்டோ.

ENG vs SL 1st Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - பென் டக்கெட் (துணை கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - ஒல்லி போப், ஹாரி புரூக், பாத்தும் நிசாங்கா
  • ஆல்ரவுண்டர்கள் - ஏஞ்சலோ மேத்யூஸ், கிறிஸ் வோக்ஸ் (கேப்டன்), தனஞ்சய் டி சில்வா, ஜோ ரூட்
  • பந்துவீச்சாளர்கள் – மேத்யூ பாட்ஸ், லஹிரு குமார, கஸ் அட்கின்சன்.

ENG vs SL 1st Test Dream11 Prediction, ENG vs SL Dream11 Prediction, Today Match ENG vs SL, ENG vs SL Test Series, ENG vs SL Dream11 Team, Fantasy Cricket Tips, EdddNG vs SL Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Sri Lanka Tour of England, Injury Update of the match between England vs Sri Lanka

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News