வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று (ஜூலை 18) நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸாக் கிரௌலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த பென் டக்கெட் - ஒல்லி போப் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களுடைய அரைசதங்களை கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின்னர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பென் டக்கெட் 14 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் 14 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய ஹாரி ப்ரூக் 36 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனாலும் மறுபக்கம் சிறப்பாக விளையாடி வந்த ஒல்லி போப் தனது சதத்தை பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 15 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 121 ரன்கள் எடுத்த நிலையில் ஒல்லி போப் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்களையும், ஜேமி ஸ்மித் 36 ரன்களையும், கிறிஸ் வோக்ஸ் 37 ரன்களையும், கஸ் அட்கின்ஸன் 2 ரன்களிலும், சோயப் பஷிர் 5 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.

இதன் காரணமாக இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ், கெவின் சிக்ளெர், கெவம் ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாளை தொடங்கும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தங்கள் முதல் இன்னிங்ஸை தொடரவுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News