England vs West Indies 3rd Test Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது நாளை (ஜூலை 26) பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இங்கிலாந்து அணியும், ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பர்ப்புகளும் அதிகரித்துள்ளன.

Advertisement

ENG vs WI 3rd Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் -  எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானம், பர்மிங்ஹாம்
  • நேரம் - ஜூன் 26, மதியம் 3.30 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

ENG vs WI 3rd Test Pitch Report

பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானம் வரலாற்றில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக இருந்துள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 57 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. அதில் 19 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 22 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரியானது 308 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் நான்காவது இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 163 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தின் அதிகபட்ச ஸ்கோராக 710 ரன்களும், குறைந்த பட்சமாக 30 ரன்களுமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம்.

ENG vs WI Head-to-Head Record

  • மோதிய போட்டிகள் - 165
  • இங்கிலாந்து - 53
  • வெஸ்ட் இண்டீஸ் - 59
  • முடிவில்லை/டிரா - 53

ENG vs WI 1st Test: Where to Watch?

Advertisement

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் கிரிக்கெட் ரசிகர்கள் இந்தத் தொடரை ஓடிடி தளத்தில் அனுபவிக்க விரும்பினால், அவர்கள் சோனி லைவ் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி தொடரை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

England vs West Indies 1st Test Probable Playing XI

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கே), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், சோயப் பஷீர், மார்க் வுட்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் உத்தேச லெவன்: கிரேக் பிராத்வைட் (கேப்டன்), மைக்கேல் லூயிஸ், கிர்க் மெக்கென்சி, அலிக் அதானச், கேவம் ஹாட்ஜ், ஜேசன் ஹோல்டர், ஜோசுவா டி சில்வா, அல்ஸாரி ஜோசப், குடாகேஷ் மோட்டி, அகீம் ஜோர்டன், ஜெய்டன் சீல்ஸ்.

ENG vs WI 1st Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர் -  ஒல்லி போப்
  • பேட்ஸ்மேன்கள் - பென் டக்கெட்(துணை கேப்டன்), ஜோ ரூட், கவேம் ஹாட்ஜ், ஹாரி ப்ரூக்
  • ஆல்ரவுண்டர் - பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், கிறிஸ் வோக்ஸ்
  • பந்துவீச்சாளர்கள் - கஸ் அட்கின்சன், அல்ஸாரி ஜோசப், சோயப் பஷீர்

ENG vs WI 3rd Test Dream11 Prediction, Today Match ENG vs WI, ENG vs WI Dream11 Team, Fantasy Cricket Tips, ENG vs WI Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England vs West Indies

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News