England Women vs New Zealand Women 5th T20I Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணியானது 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கனக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெற்று வ்ருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த  நான்கு டி20 போட்டிகளிலும் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்று 4-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

Advertisement

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வெற்றிபெறுவதுடன், தொடரை முழுமையாக கைப்பற்ற ஆர்வம் காட்டும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.

Advertisement

ENG-W vs NZ-W 5th T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து மகளிர் vs நியூசிலாந்து மகளிர்
  • இடம் -  லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், லண்டன்
  • நேரம் - ஜூலை 11, இரவு 11 மணி (இந்திய நேரப்படி)

ENG-W vs NZ-W 5th T20I Pitch Report

லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 12 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 06 வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 5 முறை வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியாக 151 ரன்களாக உள்ளது. இதனால் இந்த மைதானத்தில் பேட்டர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

ENG-W vs NZ-W ODI Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 33
  • இங்கிலாந்து மகளிர் - 26
  • நியூசிலாந்து மகளிர் - 07
  • முடிவில்லை - 00
Advertisement

England Women vs New Zealand 5th T20I Probable Playing XI

இங்கிலாந்து மகளிர் உத்தேச லெவன்: டேனியல் வையட், மியா பௌச்சர், ஆலிஸ் கேப்ஸி, நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹீதர் நைட் (கே), ஏமி ஜோன்ஸ், டேனியல் கிப்சன், சார்லி டீன், சோஃபி எக்லெஸ்டோன், லாரன் பெல், சாரா க்ளென்

நியூசிலாந்து மகளிர் உத்தேச லெவன்: சூஸி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், அமெலியா கெர், சோஃபி டிவைன் (கே), மேடி கிரீன், ப்ரூக் ஹாலிடே, இசபெல்லா கேஸ், ஜெஸ் கெர், லியா தஹுஹு, ஹன்னா ரோவ், லீ காஸ்பெரெக்

Advertisement

ENG-W vs NZ-W 5th T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - மேட் கிரீன்
  • பேட்ஸ்மேன்கள் - ஹீதர் நைட், மையா பௌச்சர் (துணை கேப்டன்), சூஸி பேட்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - நாட் ஸகைவர் பிரண்ட், சோஃபி டிவைன், அமெலியா கெர், சார்லி டீன்
  • பந்துவீச்சாளர்கள் - சாரா க்ளேன்,  லியா தஹுஹு

ENG-W vs NZ Dream11 Prediction, ENG-W vs NZ-W 5th T20I Dream11 Team, Fantasy Cricket Tips, ENG-W vs NZ-W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England Women vs New Zealand

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News