மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs இங்கிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Mon, Oct 07 2024 12:13 IST
Image Source: Cricketnmore

England Women vs South Africa Women Dream11 Prediction, T20 World Cup 2024:  ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தங்களது முதல் லீக் ஆட்டத்தில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

ENG W vs SA W World Cup Match: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா மகளிர் vs இங்கிலாந்து மகளிர்
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
  • நேரம் - அக்.07 இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

ENG W vs SA W T20I Pitch Report

தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து  மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த லீக் போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 52 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 31 முறையும், சேஸிங் செய்த அணி 21 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 144 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 215 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

ENG W vs SA W T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 24
  • தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி - 04
  • இங்கிலாந்து மகளிர் அணி - 19
  • முடிவில்லை - 01

ENG W vs SA W T20I Live Streaming Details

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை டிஸ்னி பிளர் ஹாட் ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

England Women vs South Africa Women Probable Playing XI

இங்கிலாந்து மகளிர் அணி: டேனியல் வையட், ஆலிஸ் கேப்ஸி, சோபியா டங்க்லி, நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹீதர் நைட் (கே), எமி ஜோன்ஸ், சோஃபி எக்லெஸ்டோன், டேனியல் கிப்சன், சார்லி டீன், சாரா கிளென், லாரன் பெல்

தென் ஆப்பிரிக்க மகளிர் அணி: லாரா வோல்வார்ட் (கே), டஸ்மின் பிரிட்ஸ், மரிஸான் கேப், அன்னேக் போஷ், சுனே லூஸ், சோலே ட்ரையன், நாடின் டி க்ளெர்க், அன்னேரி டெர்க்சன், சினாலோ ஜாஃப்டா, நோன்குலுலேகோ மலாபா, அயபோங்கா காகா

ENG W vs SA W T20I Dream11 Team

விக்கெட் கீப்பர் - ஏமி ஜோன்ஸ்
பேட்ஸ்மேன்கள்- ஹீதர் நைட், டேனியல் வையட், லாரா வோல்வார்ட், டஸ்மின் பிரிட்ஸ்
ஆல்-ரவுண்டர்கள் - நாட் ஸ்கைவர் பிரண்ட் (கேப்டன்), மரிஸான் கேப் (துணைகேபடன்), சுனே லூஸ்
பந்துவீச்சாளர்கள் – சோஃபி எக்லெஸ்டோன், அயபோங்கா காகா

ENG W vs SA W T20I Dream11 Prediction, ENG W vs SA W Dream11 Team, Fantasy  Cricket Tips, ENG W vs SA W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England Women vs South Africa Women.

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை