England Women vs Scotland Women, Match 14 ICC Women's T20 World Cup 2024 Dream11 Prediction: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடிய 2 போட்டிகளிலும்  வெற்றிபெற்று அசத்தியுள்ளது. அதேசமயம் ஸ்காட்லாந்து அணி விளையாடிய 3  போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் இப்போட்டியிலாவது வெற்றிபெற்று ஆறுதலைத் தேடுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

ENG-W vs SCO-W Match 17: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து மகளிர் vs ஸ்காட்லாந்து மகளிர்
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
  • நேரம் - அக்.13 மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

ENG-W vs SCO-W Match 17: Ground Pitch Report

இங்கிலாந்து - ஸ்காட்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி போட்டி ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 56 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 32 முறையும், சேஸிங் செய்த அணி 24 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 140 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 215 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

ENG-W vs SCO-W Match 17: Head-to-Head 

  • மோதிய போட்டிகள் - 00
  • இங்கிலாந்து மகளிர் அணி - 00
  • ஸ்காட்லாந்து மகளிர் அணி - 00
  • முடிவில்லை - 00
Advertisement

ENG-W vs SCO-W Match 17: Live Streaming Details

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை டிஸ்னி பிளர் ஹாட் ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

England Women vs Scotland Women Possible XIs

Advertisement

இங்கிலாந்து மகளிர் அணி: மையா பௌச்சர், டேனியல் வையாட், ஆலிஸ் கேப்ஸி, நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹீதர் நைட்(கே),ஆமி ஜோன்ஸ், டேனியல் கிப்சன், சோஃபி எக்லெஸ்டோன், சார்லோட் டீன், சாரா க்ளென், லின்சி ஸ்மித்.

ஸ்காட்லாந்து மகளிர் அணி: சாஸ்கியா ஹார்லி, சாரா பிரைஸ், கேத்ரின் பிரைஸ்(கே), ஐல்சா லிஸ்டர், பிரியனாஸ் சாட்டர்ஜி, டார்சி கார்ட்டர், லோர்னா ஜாக், கேத்தரின் ஃப்ரேசர், அப்தாஹா மக்சூத், ரேச்சல் ஸ்லேட்டர், ஒலிவியா பெல்.

ENG-W vs SCO-W Match 17: Dream11 Team

Advertisement

விக்கெட் கீப்பர்: சாரா பிரைஸ், ஐல்சா லிஸ்டர்
பேட்டர்ஸ்: டேனியல் வையட், மையா பௌச்சர், ஹீதர் நைட், ஒலிவியா பெல்
ஆல்-ரவுண்டர்கள்: நாட் ஸ்கைவர் பிரண்ட்(கே), சாஸ்கியா ஹார்லி, கேத்ரின் பிரைஸ்
பந்து வீச்சாளர்கள்: லின்ஸி ஸ்மித், சோஃபி எக்லெஸ்டோன்

ENG W vs SCO W T20I Dream11 Prediction, ENG W vs SCO W Dream11 Team, Fantasy  Cricket Tips, ENG W vs SCO W Pitch Report, Today Cricket Match Prediction, Today Match Prediction, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England Women vs Scotland Women

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News