2022ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் அட்டவணையை வெளியிட்ட இங்கிலாந்து!

Updated: Wed, Sep 08 2021 18:31 IST
England announce blockbuster home season for 2022 (Image Source: Google)

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று 2022ஆம்  ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையைவெளியிட்டுள்ளது. இதில் இந்தியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்கின்றன. 

நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் தென்ஆப்பிரிக்கா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்டு, ஒருநாள், டி20 போட்டியிலும், இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 போட்டிகளிலும் விளையாடுகின்றன.

இதில் நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஜூன் 2ஆம் தேதி  தொடங்கி ஜூன் 27ஆம் தேதி முடிவடைகிறது. தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான தொடர் ஜூலை 19 முதல் செப்டம்பர் 12வரை நடைபெறுகிறது.

மேலும் இந்திய அணியின் சுற்றுப்பயணம் ஜூலை 1ஆம் தேதி டி20 தொடருடன் தொடங்கி, ஜூலை 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 

இந்திய அணியின் இங்கிலாந்துச் சுற்றுப்பயணம்: 

டி20 தொடர்

  • முதல் டி20 - ஜூலை 1, மான்செஸ்டர்
  • 2ஆவது டி20 - ஜூலை 3, நாட்டிங்கம்
  • 3ஆவது டி20 - ஜூலை 6, செளதாம்ப்டன்

Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!

ஒருநாள் தொடர்

  • முதல் ஒருநாள் - ஜூலை 9, பிர்மிங்ஹம்
  • 2ஆவது ஒருநாள் - ஜூலை 12, லண்டன் ஓவல்
  • 3ஆவது ஒருநாள் - ஜூலை 14, லண்டன் லார்ட்ஸ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை