ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ஹாரி புரூக் அறிவிப்பு!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை நேற்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதையடுத்து இத்தொடருக்கான அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் ஹாரி புரூக்கை ரூ.6.25 கோடிக்கு டெலி கேப்பிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. இந்நிலையில் அவர் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக ஹாரி புரூக், தேசிய அணியுடனான தனது கடமைகளுக்கு தயாராக வேண்டியதன் அவசியத்தை அவர் மேற்கோள் காட்டி இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ஐபிஎல்லில் இருந்து ஹாரி புரூக் விலகுவது இது தொடர்ந்து இரண்டாவது முறையாகும், என்பதால் இனிவரும் ஐபிஎல் தொடர்களில் அவர் பங்கேற்க தடை விதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போதும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட இருந்த ஹாரி ப்ரூக் அத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பாட்டியின் மறைவு காரணமாக த்தொடரில் இருந்து வெளியேறி இருந்தார். இதன் காரணமாகவே அவருக்கு அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஏஎனில் ஐபிஎல் தொடரின் புதிய விதியின்படி, "வீரர் ஏலத்தில் பதிவு செய்து, ஏலத்தில் தேர்வு செய்யப்பட்ட பிறகு, சீசன் தொடங்குவதற்கு முன்பு தொடரில் இருந்து விலகினால், அடுத்த இரண்டு சீசன்கள் அவர் விளையாட தடை விதிக்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தார். அதேசமயம் காயம் அல்லது வேறு ஏதேனும் மருத்துவப் பிரச்சனை காரணமாக வெளியேறும் வீரர்களுக்கு இந்த விதி பொறுந்தாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
டெல்லி கேப்பிட்டல்ஸ்: கேஎல் ராகுல், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், நடராஜன், மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் சர்மா, மோஹித் ஷர்மா, ஃபஃப் டு பிளெஸ்சிஸ், முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், துஷ்மந்த சமீரா, டோனோவன் ஃபெரீரா, அஜய் மண்டல், மன்வந்த் குமார், திரிபுரானா விஜய், மாதவ் திவாரி.